News April 18, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News December 28, 2025

மீண்டும் அணிக்கு திரும்பும் ஸ்ரேயஸ்

image

காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த <<18347826>>ஸ்ரேயஸ்<<>>, மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பூரண குணமடைந்துவிட்டதாக BCCI வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், வரும் ஜனவரி 3 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற உள்ள விஜய் ஹசாரே டிராபி போட்டிகளில் மும்பை அணிக்காக அவர் விளையாட உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து நியூசி.,க்கு எதிரான ODI தொடரில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

News December 28, 2025

நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

image

தமிழகத்தில் நாளை(டிச.29) உறைபனி ஏற்பட வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கொடைக்கானலில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், காலை 6 முதல் 8 மணி வரை வாகனங்களில் வெளியே செல்வதை தவிருங்கள். உங்கள் ஊரில் பனியின் தாக்கம் எப்படி இருக்கிறது?

News December 28, 2025

மேனேஜரை அதிரடியாக நீக்கிய விஷால்

image

தனது மேனேஜரும், விஷால் மக்கள் நல இயக்கத்தில் செயலாளருமான ஹரிகிருஷ்ணனை பதவியில் இருந்து நீக்கி நடிகர் விஷால் அறிவித்துள்ளார். தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி, தேவி சமூக அறக்கட்டளை மற்றும் விஷால் மக்கள் நல இயக்கம் ஆகியவற்றுடன் எந்த விதத்திலும் ஹரிகிருஷ்ணன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடையவர் அல்ல. எனவே எந்தவொரு விஷயத்திலும் அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!