News April 17, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News December 18, 2025
மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கியதால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹12,440-க்கும், சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹99,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹400, இன்று ₹320 என 2 நாளில் ₹720 அதிகரித்துள்ளது.
News December 18, 2025
தேர்தல் அறிக்கை.. திமுகவுக்கு உள்ள சவால்கள்

2021 தேர்தலில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கூறிய திமுக, தற்போது அதை மறுப்பதால் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். நீட் ரத்து, சிலிண்டருக்கு ₹100 மானியம், மாதம் ஒரு முறை மின் கணக்கீடு, கல்விக்கடன் தள்ளுபடி ஆகிய வாக்குறுதிகளும் கிடப்பில் உள்ளன. எனவே, <<18592144>>திமுகவின் 2026 தேர்தல் அறிக்கையை<<>> தயாரிக்கும் குழுவுக்கு பல சவால்கள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News December 18, 2025
விஜய் பரப்புரை.. முதல் அதிர்ச்சி சம்பவம்

விஜய் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற இளைஞருக்கு திடீரென்று உடல்நிலை பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்து வந்ததால், அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்த உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தவெகவினர், அவரை மீட்டு போலீஸ் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறை ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர்.


