News April 11, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News October 30, 2025
‘ஜனநாயகன்’ பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. தீபாவளிக்கு படத்தின் அப்டேட் ஏதாவது கிடைக்கும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், கரூர் சம்பவத்தால் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், நவம்பர் முதல் வாரத்தில் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News October 30, 2025
தடகள வீராங்கனைக்கு ₹25 லட்சம்!

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த எட்வினா ஜேசன், பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் 55.43 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் பெண்கள் மெட்லி ரிலே போட்டியில் அவரது இறுதி ஓட்டம் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வெல்ல உதவியது. இந்நிலையில், அவருக்கு TN அரசின் ₹25 லட்சம் ஊக்கத் தொகையை, DCM உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
News October 30, 2025
உலகக்கோப்பையில் வரலாறு படைத்த SA வீராங்கனை!

மகளிர் ODI உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மரிசேன் கேப் படைத்துள்ளார். அவர் 44 விக்கெட்களை வீழ்த்தி, இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமியின்(43) சாதனையை முறியடித்தார். மேலும், ODI உலகக்கோப்பை பைனலுக்கு முதல் முறையாக தகுதி பெற்ற தென்னாப்பிரிக்க அணி என்ற பெருமையையும் லாரா வோல்வார்ட் தலைமையிலான SA பெண்கள் அணி படைத்துள்ளது.


