News April 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 07) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News April 15, 2025
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. ஆசிய கண்டத்துக்கு ஆபத்தா?

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் உயிரை குடித்தது. அத்தோடு நிற்கவில்லை. சீனா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், பிஜி தீவு என ஆசிய கண்டத்தில் இருக்கும் பல்வேறு நாடுகளில் அண்மை காலமாக நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 4.39 மணியளவில் நேபாளத்திலும் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்துக்கு என்னதான் ஆச்சு?
News April 15, 2025
Whatsapp-ல் “ஸ்டோரேஜ் புல்” பிரச்சனையா?

Whatsapp-ல் தானாகவே பல தரவுகள் டவுன்லோடாகி, ஸ்டோரேஜ் நிரம்பி ‘Storage Full’ பிரச்னையை சந்திக்கிறோம். இது எரிச்சலான விஷயமாகும். போன் ஸ்டோரேஜை சேமிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. Whatsapp-ல் வலது மூலையில் இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்து அதில், ‘Settings’-ஐ தேர்வு செய்யவும். அதில், ‘Chats’-ஐ கிளிக் செய்து, Media Visibility-ஐ ஆப் செய்து வையுங்கள். இது போனின் ஸ்டோரேஜ் பயன்பாட்டை மேம்படுத்த உதவும்.
News April 15, 2025
வரிசைக்கட்டிய சாதனைகள்… அசத்திய ‘தல’ தோனி

CSK கேப்டன் தோனி LSG-க்கு எதிரான மேட்ச்சில், அடுத்தடுத்த ரெக்கார்டுகளை படைத்துள்ளார் *IPL-ல் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் பட்டியலில் 2வது இடம்(18). முதல் இடத்தில் ரோஹித் (19) இருக்கிறார் *ஸ்டம்பிங், கேட்ச், ரன் அவுட்கள் சேர்த்து IPL-ல் 200 விக்கெட் வீழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் * IPL வரலாற்றிலேயே, அதிக இன்னிங்ஸில்(132) சிக்ஸ் அடித்த வீரர் போன்ற ரெக்கார்டுகளை தோனி படைத்துள்ளார்.