News April 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 05) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News January 11, 2026
FLASH: ‘ஜெ.குரு பாமக’ உதயமானது

‘ஜெ.குரு பா.ம.க’ என்ற பெயரில் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை புதிய கட்சியை தொடங்கியுள்ளார். நேற்று சேலத்தில் நடந்த கட்சி தொடக்க விழாவில் கட்சியின் கொடியையும் அவர் அறிமுகம் செய்தார். வன்னியர்களுக்கு துரோகம் செய்த அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி வைத்துள்ளதாகவும், பாஜகவில் ஒரு வன்னியர் கூட இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 11, 2026
₹15 லட்சம் வரை நிதியுதவி.. விண்ணப்பிக்க அவகாசம்

தமிழகத்தில் துவக்க நிலையில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ₹10 லட்சமும், பெண்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு ₹15 லட்சமும் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. புத்தொழில் ஆதார நிதியின் கீழ் வழங்கப்படும் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 30-ம் தேதி வரை <
News January 11, 2026
5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுவையிலும் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், விழுப்புரம், திருச்சி, ராமநாதபுரம், நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் காலை 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


