News April 4, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 04) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News April 4, 2025
ஹன்சிகா வழக்கு.. காவல்துறைக்கு உத்தரவு

ஹன்சிகா மீது அவரது நாத்தனார் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னை கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் ஹன்சிகாவும் அவரது தாயாரும் தடுப்பதாக தெரிவித்திருந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி இருவரும் நீதிமன்றம் சென்றனர். இதையடுத்து காவல்துறை பதிலளிக்க கோரி வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு மும்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.
News April 4, 2025
கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்து 6 பேர் பலி

மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நாந்தேட் பகுதியில் டிராக்டரில் 11 பேர் பயணம் செய்ததாகத் தெரிகிறது. எதிர்பாராத விதமாக டிராக்டர் கிணற்றுக்குள் விழுந்ததில், அதிலிருந்த 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ₹2 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார்.
News April 4, 2025
சோனியா காந்தியை சாடிய மக்களவை சபாநாயகர்

வக்ப் வாரிய மசோதா ஜனநாயகத்தை தகர்த்துவிட்டதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி விமர்சித்திருந்தார். இந்நிலையில் முறையான விவாதம் நடத்தி, வாக்கெடுப்புக்கு பின்னரே மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் மூத்த தலைவர் ஒருவர் விதிமுறைகளை பின்பற்றிவில்லை என பேசுவது துரதிஷ்டவசமானது எனவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.