News March 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News August 5, 2025
நடிகர் ஷா நவாஸ் பிரேம் நசீர் காலமானார்!

பிரபல மலையாள நடிகர் ஷா நவாஸ் பிரேம் நசீர்(71) கிட்னி பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மலையாள சினிமாவின் ஜாம்பவான் பழம்பெரும் நடிகர் பிரேம் நசீரின் மகன் இவர். 1977 முதல் மலையாள மொழி படங்களில் நடித்து வந்த ஷா நவாஸ் கடைசியாக 2022-ல் வெளியான ‘ஜன கன மன’ படத்தில் நடித்திருந்தார். தமிழில் வெளியான ‘ஜாதி பூக்கள்’ (1987) படத்தில் இவர் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 5, 2025
காலம் தாழ்த்துவது பேராபத்து: ஸ்டாலினுக்கு நயினார் வார்னிங்

திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் டெல்டாவின் கடைமடைப் பகுதிகளை வறட்சியில் தவிக்க விடப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியும் ஆறுகள், வாய்க்கால்கள், கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இனியும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது காலம் தாழ்த்துவது பேராபத்தில் சென்று முடியும் என்பதை ஸ்டாலின் உணர வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
ENG தொடர்: WTCல் இந்தியாவின் நிலை என்ன?

ENG டெஸ்ட் தொடரை சமன் செய்து இந்திய அணி WTC புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில், 3-வது இடத்தில் இருந்த ENG அணி 2 புள்ளிகள் குறைந்து 4-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஆஸி & இலங்கை அணிகள் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன. வங்கதேசம் & வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முறையே 5 & 6 வது இடங்களில் உள்ளன. 2025- 2027 சீசனில் PAK, SA & NZ ஆகியவை இன்னும் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.