News March 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News August 5, 2025
சீனா இளைஞர்களிடம் பரவும் புது டிரெண்ட்

சீனாவில் இப்போது பல இளைஞர்கள் பச்சை குழந்தையாகவே மாறிவிட்டனர். ஆமாங்க, அழும் குழந்தைகளை சமாதானப்படுத்த பயன்படும் Pacifiers-ஐ, இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்துவது சீனாவில் டிரெண்டாகியுள்ளது. இதனை வாயில் வைத்தால், கவலைகளை மறந்து உறங்க முடிவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதனால் உடலில் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
News August 5, 2025
கணவரை பிரியும் ஹன்சிகா.. சூசக அறிவிப்பு?

நடிகை ஹன்சிகா சோஹைல் கதுரியா என்பவரை 2022-ல் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவர்கள் விவாகரத்து பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஹன்சிகாவின் இன்ஸ்டாவில் திருமண போட்டோஸ், சோஹைலுடன் எடுத்துக் கொண்ட எந்த ஒரு போட்டோவும் இல்லாததால், இந்த கருத்து எழுந்துள்ளது. பெரும்பாலும் பிரபலங்கள் விவாகரத்தை இன்ஸ்டாவில் திருமண போட்டோக்களை டெலிட் செய்து தான் அறிவிக்கின்றனர்.
News August 5, 2025
திமுக பேய், அதிமுக பிசாசு.. சீமான் விமர்சனம்

திமுக, அதிமுகவை பேய், பிசாசு என்று சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் அனைவரும் பாஜகவின் வாக்குகள்தான். தமிழகத்தை இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக்க முயற்சி நடக்கிறது என்றும் தமிழகம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளதால், வட இந்தியர்களுக்கு வாக்குரிமை தரக்கூடாது எனவும் கூறிய அவர், மாடுகளுக்கு மட்டுமல்ல மரங்களுக்காகவும் விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.