News February 27, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News February 27, 2025
ஓ.டி.டி தளத்தில் லக்கி பாஸ்கர் சாதனை

ஓ.டி.டி தளத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் புதிய சாதனைய படைத்துள்ளது. ஓ.டி.டி.யில் வெளியாகி 13 வாரங்கள் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது. நவ. 28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இந்த படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
News February 27, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶ஆறு கிழக்கு நோக்கித்தான் போகும் என்றால் மேற்கே நோக்கி போகிறவன் எதிர்நீச்சல் போட்டு தான் ஆக வேண்டும்.
▶ பலமும் பலவீனமும் விலை நியாயத்தை பொறுத்ததே தவிர அசட்டுத் துணிச்சலும் இல்லை அஞ்சி நடுங்குவதிலும் இல்லை.
▶எல்லாம் பொய்யே என்று சொல்வதன் மூலம் உன்னை தானே ஏமாற்றிக் கொள்ள முடியும் உலகத்தை அல்ல.
▶நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான்
News February 27, 2025
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணி அபாரம்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. முதலில் களமிறங்கிய குஜராத் 20 ஓவர்கள் 127/9 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் பாரதி ஃபுல்மாலி 40 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய டெல்லி, 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது வெற்றிபெற்றது. அந்த அணியின் ஜெஸ் ஜோனாசென் 61 ரன்களும், ஷபாலி வர்மா 44 ரன்கள் எடுத்தனர்.