News February 26, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News February 26, 2025

இந்தியன் சூப்பர் லீக்: பெங்களூரு அணி வெற்றி

image

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் சென்னையை வீழ்த்தி பெங்களூரு எப்.சி அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி முதல் பாதியில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் சென்னை அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

News February 26, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶மனித குலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் அமைதி. ▶பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். ▶நோயைக் காட்டிலும் நோயைப் பற்றிய பயமே அதிகமான மனிதர்களை கொன்றுள்ளது. ▶மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல. மாறாக நம்மை நாமே மாற்றிக் கொள்வது.

News February 26, 2025

அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்ட மோகன் ஜி

image

இயக்குநர் மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்திற்கான அப்டேட்டை சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ளார். தனது அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று மதியம் 11.59 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டரில் ஒரு ரத்தம் படிந்த வாள் இடம்பெற்றுள்ளது. இப்படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!