News February 25, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News February 25, 2025
காதுக்குள் பூச்சி புகுந்தால் செய்ய வேண்டியவை…

▶காதுக்குள் பூச்சி புகுந்தால் இருட்டறைக்குள் சென்று மொபைல் லைட் அல்லது டார்ச் பயன்படுத்தி வெளிச்சம் காட்டினால், பூச்சிகள் ஒளியை கண்டவுடன் தாமாகவே வெளியே வந்துவிடும். ▶மிதமான சூட்டில் உள்ள நீரில் சிறிது உப்பு கலந்து காதுக்குள் சில துளிகள் விடலாம். உப்பு கலந்த நீர் பூச்சிகளுக்கு பிடிக்காததால், அவை விரைவில் வெளியேறிவிடும். ▶ இதில் பூச்சிகள் வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
News February 25, 2025
13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 13 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஆயுஷ் மணி திவாரி சென்னை குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாகவும், ஜெயராம் சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர். சைபர் க்ரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
News February 25, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. ▶ஓய்வு, சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன். ▶ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். ▶ மதம் மனிதனை மிருகமாக்கும்; சாதி மனிதனை சாக்கடையாக்கும்.