News February 17, 2025
பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
Similar News
News December 3, 2025
TN-ல் இந்தி கற்க முடியவில்லை: எல்.முருகன்

தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை காரணமாக தன்னால் இந்தி கற்க முடியவில்லை என எல்.முருகன் கூறியிருக்கிறார். இதனால் டெல்லி சென்ற பிறகுதான் இந்தி கற்றதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் அந்த வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டது ஏன் என கேட்டுள்ளார். மேலும் இந்தி கற்பது தன்னுடைய உரிமை எனவும் ஆனால், மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கிறது என்று கூறி தமிழகம் அதனை எதிர்க்கிறது என்றும் அவர் பேசியுள்ளார்.
News December 3, 2025
புயல் சின்னம்.. மழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. காலை 5.30 மணி நிலவரப்படி புதுச்சேரி அருகே கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தரைப்பகுதிக்கு வந்ததும் மேலும் வலுவிழக்கும் எனவும் கணித்துள்ளது. மேலும், அடுத்த 2 மணி நேரத்திற்கு காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
News December 3, 2025
FLASH: மீள முடியாமல் தவிக்கும் இந்திய சந்தைகள்!

பங்குச்சந்தைகள் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இன்று வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 264 புள்ளிகள் சரிந்து 84,873 புள்ளிகளிலும், நிஃப்டி 96 புள்ளிகள் சரிந்து 25,935 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ், கடந்த 3 நாள்களில் மட்டும் 833 புள்ளிகளை இழந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


