News July 7, 2024

செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

image

காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளையும் விண்ணில் செலுத்துவதற்கு ஏதுவாக, செமி கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. செமி கிரையோஜெனிக் என்ஜினின் ஒரு பகுதி யான ப்ரி-பர்னர் இக்னிஷன் சோதனை ஏற்கனவே நான்கு முறை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 5-வது முறையாக ப்ரி-பர்னர் இக்னிஷன் சோதனை நேற்று 2 1/2 வினாடிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

Similar News

News November 13, 2025

நெல்லை: ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை

image

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பொட்டல் காலனியில் கடந்த 2017ம் ஆண்டு குடும்ப தகராறு காரணமாக வெற்றிவேல் என்பவரை கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் முடிவில் மாரிமுத்து, ஜெகதீஷ், சீதாராமன், ஈஷா மற்றும் சுடலைமாடி ஆகிய 5 பேரையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் தீர்ப்பளித்து 10 ஆயிரம் அபராதமும் விதித்தது.

News November 13, 2025

நெல்லை புதிய வருவாய் அலுவலர் நியமனம்

image

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த சுகன்யா என்பவர் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக துரை என்பவரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. நேற்று துரை முறைப்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

News November 12, 2025

தாடி வளர்க்க அனுமதி கோரிய கைதியால் பரபரப்பு

image

பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தான் தாடி வளர்க்க அனுமதிக்க வேண்டுமென சிறைக் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. முக்கிய காரணங்களுக்காக நீதிமன்றத்தின் முறையான அனுமதி பெற்று சமர்ப்பித்தால் உரிய முறையில் பரிசளிக்கப்படும் என சிலை வட்டாரம் சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!