News December 4, 2024
வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாதபட்சத்தில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புயல் மழையால் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என்றார்.
Similar News
News December 9, 2025
இன்று வரலாறு படைப்பாரா பும்ரா?

SA-க்கு எதிரான <<18509403>>டி20 தொடர்<<>> இன்று தொடங்குகிறது. இந்நிலையில், தற்போது வரை டி20 போட்டிகளில் 99 விக்கெட்களை வீழ்த்தியுள்ள பும்ரா, இன்றைய போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் போதும், வரலாறு படைப்பார். அதாவது, 3 வடிவ கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்களை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளராக பும்ரா சாதனை படைப்பார். T20 போட்டிகளில் 100 விக்கெட்களை எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளராகவும் அவர் மாறுவார்.
News December 9, 2025
விஜய்க்காக ‘மொட்டை’ அடித்த பெண்

கரூர் சம்பவத்திற்கு பின் பொதுவெளியில் விஜய்யின் முதல் மக்கள் சந்திப்பு புதுச்சேரியில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்றும், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் வேண்டி, புதுச்சேரியை சேர்ந்த தவெக பெண் தொண்டர் முடி காணிக்கை செலுத்தியுள்ளார். மேலும், இந்த முடி காணிக்கையை அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்திற்கு தானம் செய்யப்போவதாகவும் அப்பெண் அறிவித்துள்ளார்.
News December 9, 2025
புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி எஸ்பி எச்சரிக்கை

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பில், பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் போலீஸிடம் வலியுறுத்தினர். அதற்கு, உங்களால் பலர் இறந்துள்ளனர், நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லாதீர்கள் என பெண் SP ஈஷா சிங் கறாராக கூற, அங்கிருந்து ஆனந்த் புறப்பட்டார். இதனால் பதற்றம் நீடிக்கும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் விஜய் உரையாற்ற உள்ளார்.


