News May 4, 2024
மே 15ஆம் தேதி செமஸ்டர் தேர்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பி.இ., பி.டெக்., உள்ளிட்ட பல்வேறு பொறியியல் படிப்புகளை படித்து வரும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் 2 முறை செமஸ்டர் தேர்வு நடைபெறும். இந்த கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை www.annauniv.co.in என்ற இணையதளத்தில் அறியலாம் என அண்ணா பல்கலை., தெரிவித்துள்ளது.
Similar News
News August 13, 2025
தீவிரவாத தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம்

ஜம்மு & காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இருப்பினும், இந்த சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ‘ஆபரேஷன் அகல்’-ன் ஒரு பகுதியாக உரி பகுதியை சுற்றி வளைத்து ராணுவம் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளது.
News August 13, 2025
இந்தியாவுக்கு ₹15 லட்சம் கோடி இழப்பை தடுத்த ரஷ்யா

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பெறுவதை சுட்டிக்காட்டி இந்தியாவுக்கு 50% வரி விதித்துள்ளது USA. இந்நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிய வகையில் இந்தியாவுக்கு 2022 மே – 2025 மே வரை ₹1.49 லட்சம் கோடி சேமிப்பு ஆகியுள்ளதாம். ஒருவேளை ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கவில்லையென்றால், ₹15.29 லட்சம் கோடி இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
News August 13, 2025
ஆக.15ம் தேதி டாஸ்மாக் மூடல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இயங்கும் டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, சம்பந்தப்பட்ட மதுபான பார்களுக்கான உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.