News December 13, 2024
செல்வராகவனின் ஹீரோவான ஜிவி!

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பு மற்றும் இசையமைப்பில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்திற்கு ‘Mental மனதில்’ என பெயரிடப்பட்டுள்ளது. NGK’ படத்தை இயக்கிய செல்வராகவன் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனில் இறங்கியுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் இயக்கிய ‘மயக்கம் என்ன’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படங்களில் இசையமைத்த ஜிவி, தற்போது அவரின் ஹீரோவாக பரிணமித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
பகத்சிங் பொன்மொழிகள்

*முதலாளித்துவத்தை தூக்கி எறிவதே புரட்சியின் நோக்கம். *கேட்காத காதுகளை உரத்த குரல்களால் கேட்க செய்ய முடியும். *மக்களது நம்பிக்கையினை பெற்றுள்ளவரையே சட்டம் தனது புனித தன்மையினை பெற்று இருக்கும். *குருட்டு நம்பிக்கை மிகவும் ஆபத்தானது. இது மனிதனது மூளையினை முடமாக்கி மனிதனை பிற்போக்கில் தள்ளி விடும். *இச்சமூகத்தின் உண்மை கடவுள் தொழிலார்களே.
News March 11, 2026
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வீசிய ஈரான்

ஈரான் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கண்ணிவெடிகளை அமைக்கத் தொடங்கியுள்ளதாக CNN தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அம்முனையை மூடிய ஈரான், அதனை தாண்டி சென்ற சில கப்பல்களையும் தாக்கியது. தற்போது இப்பாதையில் கண்ணி வெடிகளை ஈரான் அமைத்து வருவதாக US உளவுத்துறை கண்டறிந்துள்ளது. ஏற்கெனவே இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் LPG விநியோகம் தடைபட்டுள்ள நிலையில், ஈரானின் இந்த செயலால் கடும் பதற்றம் உருவாகியுள்ளது.
News March 11, 2026
சஞ்சு சாம்சனை அடுத்த கேப்டனாக்க வேண்டும்: கைஃப்

சூர்யகுமார் யாதவ் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினால், அந்த இடத்தை சஞ்சு சாம்சனால் நிரப்ப முடியும் என Ex வீரர் முகம்மது கைஃப் கூறியுள்ளார். 35 வயதாகும் சூர்யகுமார் நீண்ட காலம் கேப்டனாக நீடிக்க முடியாது என ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் 31 வயதான, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பைனலுக்கு அழைத்து சென்ற சஞ்சு சாம்சன் அடுத்த இந்திய கேப்டனாக இருக்கலாம் என கைஃப் தெரிவித்துள்ளார்.


