News April 12, 2025
அதிமுக – பாஜக கூட்டணியை விளாசிய செல்வப் பெருந்தகை

தமிழ்நாடு அரசியலில் தற்போதய ஹாட் டாபிக் அதிமுக – பாஜக மீண்டும் கைகோர்த்துள்ளது தான். இந்நிலையில், முரண்பாடுகளின் மொத்த வடிவமாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்திருப்பதாக TN காங். கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார். திரைமறைவு நெருக்கடிக்கு பிறகு இந்த கூட்டணி உருவாகி இருப்பதாக சாடிய அவர், அதிமுக – பாஜக அமைத்திருப்பது சந்தர்ப்பவாத, கொள்கையற்ற கூட்டணி என விளாசியுள்ளார்.
Similar News
News November 14, 2025
வீட்டோடு மாப்பிள்ளையாகவும் தயார்.. சரத் பவாருக்கு கடிதம்

90s கிட்ஸ்களுக்கு திருமணம் நடப்பதே போராட்டமாக உள்ளது என்பதற்கு இச்சம்பவமும் உதாரணம். 34 வயதாகும் தனக்கு இனியும் திருமணம் நடக்கும் என்று தோன்றவில்லை, வீட்டோடு மாப்பிள்ளையாகவும் தயார் என, மஹாராஷ்டிரா இளைஞர் ஒருவர், சரத் பவாருக்கு கோரிக்கை கடிதம் அளித்துள்ளார். தன்னைப் போல் விவசாயம் செய்துவரும் இளைஞர்களை திருமணம் செய்துகொள்ள பெண் வீட்டார் முன்வரவில்லை என்றும் அவர் வேதனைப்பட தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
உழைப்பால் கிடப்பதே வெற்றி.. அஜித்தை புகழ்ந்த சூரி

அஜித்துடனான சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியாக தனது X தள பக்கத்தில் சூரி பகிர்ந்துள்ளார். அதில், ‘அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது, உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது என பதிவிட்டுள்ளார். சூரியின் இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் ஹார்ட்டினை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
News November 14, 2025
ராசி பலன்கள் (14.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


