News October 24, 2024

டாஸ்மாக் முன் செல்ஃபி.. போலீசாருக்கு புதிய உத்தரவு

image

பணியிடத்தில் சீருடையுடன் செல்ஃபி எடுத்து உயரதிகாரிக்கு அனுப்ப போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒதுக்கப்படும் பணியிடங்களுக்கு போலீசார் குறித்த நேரத்தில் செல்வதில்லை என புகார்கள் எழுகின்றன. இதனால், பணியிடங்களுக்கு உரிய நேரத்திற்கு சென்று செல்ஃபி எடுத்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 10 மணிக்கு TASMAC கடை மூடியதும் அதன் முன்பு செல்ஃபி எடுத்து உயரதிகாரிகளுக்கு அவர்கள் அனுப்புகின்றனர்.

Similar News

News January 22, 2026

தஞ்சை: ATM-ல் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

தஞ்சை மக்களே ATM-ல் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.

News January 22, 2026

கவர்னர் செயலால் அமைச்சர் அதிரடி முடிவு!

image

கவர்னர் RN ரவியின் சர்வாதிகார போக்கை கண்டிக்கும் விதமாக சென்னை பல்கலை., பட்டமளிப்பு விழாவை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்துள்ளார். இதுகுறித்து பேசுகையில், நாட்டின் உயர்கல்வியில் TN முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கவர்னர் தனது அறிக்கையில், உயர்கல்வியில் தமிழகம் தாழ்ந்து வருவதாக கூறியதையும், சட்டமன்ற மரபை மீறியதையும் கண்டித்து இந்த விழாவை புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.

News January 22, 2026

பதவியிலிருந்து உதயநிதி நீக்கப்பட வேண்டும்: BJP

image

தமிழ்நாட்டில் EPS தலைமையிலான கூட்டணி, ஊழல் அரசான திமுகவை வீழ்த்தும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். EPS-யுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் குடும்ப ஆட்சி மீது அனைத்து தரப்பு மக்களும் அதிருப்தியில் உள்ளதாகவும் சாடியுள்ளார். <<18913574>>மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும்<<>> வகையில் பேசும் உதயநிதி, அரசு பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!