News May 4, 2024

கங்கை அமரனுக்கு சீனு ராமசாமி பதிலடி

image

காப்புரிமை விவகாரத்தில் வைரமுத்துவுக்கு சீனு ராமசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வைரமுத்து மீதான கோபத்தில் இளையராஜா யாரையும் கவித்துவமாக எழுத விடாமல், 20 வருடமாக தான் இசையமைத்த நல்ல டியூன்களுக்கு Dummy வரிகளை ஓகே செய்ததாக சாடியுள்ளார். அப்படி பார்க்கும்போது, உண்மையில் வைரமுத்துவை வளர்த்தது இளையராஜாதான் என கங்கை அமரனுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Similar News

News February 13, 2026

திமுக கூட்டணியில் தீ பற்றவைத்த காங்கிரஸ்

image

திமுக என்பது ஒரு பருத்தி குடோன் போன்றது; அதற்கு இப்போது காங்., மூலம் தீ பற்றவைக்கப்பட்டுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியில் இருக்கும் காங்., விசிக, கம்யூ., கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல் தேர்தல் நேரத்தில் கொழுந்துவிட்டு எரியும் எனக் கூறிய அவர், கடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்த ஒருங்கிணைப்பு இந்த முறை இல்லை என்பதால் NDA எளிதாக வெற்றிபெறும் என்றார்.

News February 13, 2026

பொதுக்கூட்டம் இல்ல, விஜய் கிளாமரைக் காட்டும் கூட்டம்

image

சேலத்தில் தவெக சார்பில் நடைபெறவிருப்பது பொதுக்கூட்டம் அல்ல; விஜய்யின் கிளாமரைக் காட்டும் கூட்டம் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார். ஆளே இல்லாத கட்சி பொதுக்கூட்டம் கூட்டினால் கூட பொதுமக்கள் கூட்டம் வரத்தான் செய்யும் எனக்கூறிய அவர், தொகுதி வாரியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்தால் மட்டுமே விஜய்க்கும், அவரின் கட்சிக்கும் நல்லது எனவும் தெரிவித்தார்.

News February 13, 2026

ரஷ்யாவில் Whatsapp-க்கு தடை

image

ரஷ்யா Whatsapp-ஐ தடை செய்ததை உறுதிப்படுத்தியுள்ளது. பயனர்கள், உள்நாட்டு மெசஞ்சர் செயலியான ‘மேக்ஸ்’-க்கு மாறும்படி கூறி வந்த நிலையில், தற்போது இந்த தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். மேலும், Telegram மீது படிப்படியாக கட்டுப்பாடுகளை விதிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!