News April 24, 2025
ஓபிஎஸ்சுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணியா?

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-சை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ், அவரின் 2 மகன்களை நேற்று சீமான் சந்தித்துப் பேசினார். எதற்காக 3 பேரையும் அவர் திடீரென சந்தித்தார் என்றத் தகவல் இல்லை. இதுகுறித்து பேட்டியளித்துள்ள சீமான், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
Similar News
News January 9, 2026
பினராயி விஜயன் ‘சத்யாகிரகப் போராட்டம்’

கேரளாவிற்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டில் மத்திய பாஜக அரசு ‘நிதித் தடைகளை’ விதிப்பதாக கேரள CM பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்ல, இதற்கு எதிராக ஜன.12-ம் தேதி மாபெரும் ‘சத்யாகிரகப் போராட்டம்’ நடத்தப்போவதாக அறிவித்து, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்திருக்கிறார். இந்த அறப்போராட்டத்தில் கேரள மாநில அமைச்சர்கள், இடதுசாரி MLA-க்கள், MP-க்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
News January 9, 2026
கணவன்/மனைவி கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்களா?

வார்த்தைகளுக்கு நெஞ்சை பிளக்கும் அளவிற்கு சக்தி உண்டு. அதுவும் நமக்கு பிடித்தவர்களின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் கூரிய அம்பினை போன்றவை. அவர்கள் நம்மை தகாத வார்த்தைகளால் திட்டினால், அந்த நாளே மோசமானதாக மாறிவிடும். அப்போது, உங்கள் மனநிலையை உடனடியாக எடுத்து சொல்லி உங்கள் கணவன்/மனைவியை தடுத்து நிறுத்துங்கள். எவ்வளவு சண்டை வந்தாலும் தம்பதிகள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவது அவசியம்.
News January 8, 2026
ராசி பலன்கள் (09.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


