News May 7, 2025
சீமான் தலை துண்டாக்கப்படும்.. இன்ஸ்டாவில் கொலை மிரட்டல்

’சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும், அடுத்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி ஏற்படும்’ என தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகக் கூறி, இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட நாதகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் தெலுங்கர்கள் குறித்து சீமான் அவதூறாகப் பேசியதாக போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 3, 2026
ஜனவரி 3: வரலாற்றில் இன்று

*1760–வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்
*1831–சமூக செயல்பாட்டாளர் சாவித்ரிபாய் புலே பிறந்தநாள்
*1957–முதலாவது மின்கடிகாரம் அறிமுகம்
*1966–இந்திய வீரர் சேத்தன் சர்மா பிறந்தநாள்
*1972–நாடகாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் நினைவுநாள்
*1989–பாடகி சைந்தவி பிறந்தநாள்
*1993–நடிகை நிக்கி கல்ரானி பிறந்தநாள்
*2002–விஞ்ஞானி சதீஷ் தவான் நினைவுநாள்
News January 3, 2026
ரீ-ரிலீசிலும் ரஜினியின் ‘படையப்பா’ சாதனை

ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ ரீ-ரிலீசானது. இந்நிலையில், ரீ-ரிலீசிலும் 25 நாள்கள் வெற்றிகரமாக ஓடி ‘படையப்பா’ மெகா பிளாக்பஸ்டர் ஆகியுள்ளதாக படக்குழு அறிவித்து, ரம்யா கிருஷ்ணன், ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் பூங்கொத்துடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளது. ₹20 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எத்தனை பேர் படையப்பாவை மீண்டும் பார்த்திங்க?
News January 3, 2026
திருமணத்திற்கு NO.. காதலனை கத்தியால் குத்திய காதலி

புத்தாண்டு கொண்டாட்டத்தில் காதலனின் பிறப்புறுப்பை காதலி கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் 42 வயது ஆணும், 25 பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தன்னை திருமணம் செய்யுமாறு பலமுறை வலியுறுத்தியும், காதலன் மறுத்ததாக விபரீத முடிவை காதலி எடுத்தாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவான பெண்ணை போலீஸ் தேடுகிறது.


