News February 27, 2025

பிரசாந்த் கிஷோரை பாராட்டிய சீமான்

image

கெட் அவுட் என்று கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோரை தான் பாராட்டுவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அவரது மொழியை கெட் அவுட் என்று சொல்ல அவருக்கு மனதில்லை, அதுபோல நம் மொழியை விட்டுக்கொடுக்க நமக்கு மனமில்லை எனவும் தெரிவித்தார். இந்த சண்டை தவிர்க்க முடியாத போர் என்றும், இதில் வென்று மொழியை காக்கும் வரையிலும் சண்டை தொடரும் எனவும் குறிப்பிட்டார்.

Similar News

News February 27, 2025

விரைவில் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்!

image

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிப்பு வரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக திருமணமாகி ரேஷன் கார்டு பெற்றவர்கள், தவறான காரணங்களால் பெயர் விடுபட்டவர்கள், அரசு அல்லாத சில கூட்டுறவு ஊழியர்களின் குடும்பத்தினரும் இதில் சேர்க்கப்பட உள்ளனர். 1.10 கோடி பேர் ரூ.1000 பெறும் நிலையில், மேலும் பல லட்சம் பேர் சேர்க்கப்பட உள்ளனர். அப்ளை செய்ய ஆவணங்களைத் தயாராக வையுங்கள் மக்களே..

News February 27, 2025

உக்ரைன் அதிபர் USA பயணம்

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை USA வர உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைனின் அரிய கனிம வளங்களை USAவிற்கு வழங்கவும், அதற்கு பதிலாக பாதுகாப்பு, நிதி பெற்றுக் கொள்வது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. டிரம்ப் பதவியேற்றதும், USAவின் நிலைப்பாடு ரஷ்யாவுக்கு ஆதரவாக மாறி வருவதைத் தொடர்ந்து நடைபெறும் சந்திப்பு என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

News February 27, 2025

ஓயாத வன்முறை: கதறும் ராணுவ தளபதி

image

வங்கதேசம் மிகுந்த ஆபத்தில் இருப்பதாக கவலை தெரிவித்திருக்கிறார் ராணுவ தளபதி ஜெனரல் வக்கார் உஸ் ஜமான். மாணவர்கள் நடத்திய கிளர்ச்சியால், ஷேக் ஹஸீனாவின் ஆட்சி கடந்த ஆண்டு கவிழ்ந்த நிலையில், உயிருக்கு பயந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். ஆனாலும், வங்கதேசத்தில் வன்முறை இன்னும் ஓயவில்லை. நிலைமை மோசமடைந்திருப்பதால் மக்கள் ஒழுக்கமுடனும் ஒற்றுமையுடனும் இருக்குமாறு ராணுவ தளபதி வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!