News September 27, 2025
ஒட்டுமொத்த சனியின் உருவமே சீமான் தான்: ஜெயக்குமார்

மறைந்த தலைவர்களை பற்றி கொச்சையாக பேசினால் சீமானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சனியில் எத்தனையோ விதம் இருந்தாலும், ஒட்டுமொத்த சனியின் ஒற்றை உருவமாக சீமான் உள்ளார் என்றும் மறைந்த தலைவர்களை பற்றி பேசி அதிமுகவிடம் சீமான் வாங்கிக்கட்டி கொள்ள வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், சீமானுக்கு மறை கழன்றுவிட்டதாகவும் சைகை காண்பித்து அவர் விமர்சித்தார்.
Similar News
News January 5, 2026
EPS-க்கு அருகதை இருக்கா? சிவசங்கர்

திமுகவை கார்ப்பரேட் கம்பெனி என கூறும் அதிமுக, எப்போதோ அடிமை கம்பெனியாக மாறிவிட்டதாக அமைச்சர் சிவசங்கர் சாடியுள்ளார். 55,000 லேப்டாப்களை வழங்காமல் வீணடித்த EPS-க்கு, திமுக அரசின் லேப்டாப் திட்டத்தை பற்றி பேச அருகதை இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு திட்டங்கள் தன்னால் தான் நடந்தது எனக்கூறி வரும் EPS, ‘நானே எல்லாம் செய்பவன்’ என்ற கடவுள் மனப்பான்மையில் வாழ்ந்து வருவதாகவும் விமர்சித்தார்.
News January 5, 2026
இரும்பு கை மாயாவியாகும் அல்லு அர்ஜுன்

லோகேஷ் கனகராஜின் கனவான ‘இரும்பு கை மாயாவி’ படத்தில் நடிக்க சூர்யா முதல் ஆமிர் கான் வரை பலரும் போட்டி போட்டனர். ஆனால், ‘கூலி’ படத்தின் ரிசல்ட் அனைத்தையும் மாற்றிவிட்டது. தற்போது, அந்த கதையின் மீது நம்பிக்கை வைத்து அல்லு அர்ஜுன் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டின் 2-ம் பாதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மீண்டும் PAN இந்தியன் ஹிட் கொடுப்பாரா லோகி?
News January 5, 2026
இந்தியாவுக்கு டிரம்ப் வார்னிங்!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை எனில் வரியை மேலும் உயர்த்துவோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார். PM மோடியை மிகச்சிறந்த மனிதர் என பாராட்டிய அவர், தனது அதிருப்தியை மோடி அறிவார் என்றும், வர்த்தகம் செய்ய தன்னை மகிழ்ச்சிப்படுத்துவது அவருக்கு முக்கியம் எனவும் தெரிவித்தார். ஏற்கெனவே 50% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இது இருநாடுகள் இடையேயான வரி சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது.


