News October 25, 2024
பாஜக எதிர்பார்ப்பதை சீமான் செய்கிறார்… திருமா பாய்ச்சல்

பாஜக எதிர்பார்ப்பதையே சீமான் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். தேசிய இனத்தின் அடிப்படையில் தமிழர், திராவிடர் என பாகுபடுத்தி சீமான் பேசுவது சரியான விவாதமும் இல்லை, லாஜிக்கும் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார். திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட வேண்டும் என்பது இபிஎஸ் வேட்கையாக இருக்கலாம் என்று கூறியுள்ள திருமாவளவன், ஆனால் அதுபோல் விரிசல் விழாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 19, 2026
விஜய்யுடன் கூட்டணியை விரும்பாத காங்., தலைமை!

தவெக உடன் கூட்டணி இல்லை என்பதை காங்கிரஸ் தலைமை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து பயணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் – தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணியில் தொடர விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
News January 19, 2026
நிபா வைரஸ்: தமிழக அரசு எச்சரிக்கை

மேற்கு வங்கத்தில் பரவிவரும் நிபா வைரஸ் காரணமாக தமிழகத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மூச்சுத்திணறல், மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும் என்றும் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 19, 2026
நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றமளிக்கிறது: கில்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் தாங்கள் விளையாடிய விதம் சற்று ஏமாற்றமளித்தாக இந்திய கேப்டன் கில் கூறியுள்ளார். நாங்கள் சில விஷயங்களை சிந்தித்து மேம்படுத்த வேண்டும் என்று பேசிய கில், விராட் கோலி மற்றும் 8-வது இடத்தில் கலக்கிய ஹர்ஷித் ஆகியோரின் பேட்டிங்கை பாராட்டினார். மேலும், இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.


