News April 15, 2024
சீமானுக்கு அது இருக்கு, கமலுக்கு இல்லையே

நாம் தமிழர் கட்சியை சீமான் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகி விட்டன. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் தோல்விகளை சந்தித்தும் தில்லாக போட்டியிடுகிறது. கமலின் மநீம தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. இந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. இதை கண்ட அரசியல் ஆர்வலர்கள், சீமான் தில்லாக போட்டியிடுகிறார், ஆனால் தில் இல்லாமல் கமல் பின்வாங்கி விட்டாரே என பேசுகின்றனர்.
Similar News
News November 21, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (நவ.21) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கண்ணதாசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News November 21, 2025
பட நிகழ்ச்சியில் பாடல் பாடியதற்கு ₹1 கோடி சம்பளமா?

பட தயாரிப்பை விட, அதன் புரமோஷனுக்கே அதிகம் செலவிடுவதற்கு சமீபத்தில் நடந்த ‘வாரணாசி’ பட நிகழ்ச்சியே சாட்சி. டைட்டில் ரிலீஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் ₹27 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், மற்றுமொரு ஆச்சரியமடைய வைக்கும் செய்தியும் வெளியாகியுள்ளது. இதே ஈவென்ட்டில், ஒரு பாடல் நிகழ்ச்சியை நடத்திய ஸ்ருதிஹாசனுக்கு ₹1 கோடி சம்பளம் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News November 21, 2025
அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், முதலில் சூடுபிடித்த சிபிஐ விசாரணையில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உரிய நேரத்தில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், நவ.27-க்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு அன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அஜித் குமார் கொலை குறித்த மேலும் பல உண்மைகள் குற்றப்பத்திரிகையில் வெளியாக வாய்ப்புள்ளது.


