News January 31, 2025
குருமூர்த்தியோடு சீமானுக்கு தொடர்பு: ஜெகதீச பாண்டியன்

தன்னால் சங்கியாக இருக்க முடியாது என்ற காரணத்தால்தான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியதாகவும் ஜெகதீச பாண்டியன் கூறியுள்ளார். குருமூர்த்தி, கோபால்ஜியை சீமான் அடிக்கடி தனியாக சந்தித்து பேசுவதாகவும், அவர்கள் ஆலோசனையின் படியே பெரியாரை அவர் தவறாக பேசுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் தேசியம் இந்த மண்ணில் மலரக்கூடாது என்ற நோக்கில் சீமான் செயல்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News August 11, 2025
கேஸ் அடுப்பு வாங்குவதற்கு முன்.. இத கவனியுங்க!

பல பிராண்டுகளில் கேஸ் அடுப்புகள் கிடைப்பதால், அவற்றில் எது தரமானது என்ற குழப்பம் இனி வேண்டாம். கேஸ் அடுப்புகளுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கும் திட்டம் 2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என மத்திய மின்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ரேட்டிங், அடுப்புகளின் நீடிக்கும் திறன், சூடாக்கும் திறன் மற்றும் தரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு, அடுப்பின் மீதே ஒட்டப்பட்டிருக்கும். SHARE IT.
News August 11, 2025
சுதந்திர தினம்.. இன்று முதல் அதிரடி ஆஃபர்

சுதந்திர தினத்தையொட்டி, ‘Air India Express’ விமான பயண கட்டணத்தில் அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளது. இன்று முதல் 15-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் 50 லட்சம் பயணியருக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. அதன்படி, உள்நாட்டு விமான பயண கட்டணம் ₹1,279, சர்வதேச விமான பயண கட்டணம் ₹4,279லிருந்து தொடங்குகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
News August 11, 2025
அதிமுக தலைவர்களை விமர்சிக்க கூடாது: திருமா

MGR, ஜெயலலிதாவை திருமாவளவன் விமர்சித்ததாக கூறி அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு விசிக தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், அதிமுக தலைவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் யாரும் பேச வேண்டாம் என கட்சியினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். எந்த தலைவர்களையும் அவமதிக்கும் நோக்கம் தனக்கில்லை என தெரிவித்த அவர், விமர்சனத்திற்கு விளக்கம் அளிக்க தயார் எனவும் கூறியுள்ளார்.