News February 25, 2025
குற்றம் உறுதியானால் சீமானுக்கு 6 ஆண்டுகள் சிறை

பாலியல் வழக்கில் சீமான் குற்றவாளி என கோர்ட் உறுதி செய்துவிட்டால், அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். விஜயலட்சுமி கட்டாய கருக்கலைப்பு செய்தபோது, கணவர் என்ற இடத்தில் சீமான் கையெழுத்திட்ட ஆவணம்தான் அவருக்கு எதிரான மிகப் பெரிய ஆதாரமாக இருக்கிறதாம். இதற்கு வலுசேர்க்கும் வகையில்தான் அவருக்கு ஆண்மை மற்றும் குரல் பரிசோதனை செய்யப்பட உள்ளதாம்.
Similar News
News March 11, 2026
PM மோடிக்கு CM ஸ்டாலின் அவசர கடிதம்

TN-ல் அனைத்து வகை சிலிண்டர்களும் தடையின்றி கிடைப்பதை PM மோடி உறுதிசெய்ய வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தனது கடிதத்தில் அவர், உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தொழில்மயமான TN பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 11, 2026
₹40,000+ சம்பளம்… 667 பணியிடங்கள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <
News March 11, 2026
‘அம்மா.. நான் சாகப் போகிறேன்’

மும்பையில் காதலன் கொடுத்த மென்டல் டார்ச்சரால், 6 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக புத்தி கொண்ட காதலன், மாணவி ஸ்துதி சோனாவானேவை(24) தொடர்ந்து மனதளவில் டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், விரக்தி அடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை உணருங்கள் நண்பர்களே!


