News August 8, 2025
கோபி, சுதாகருக்கு ஆதரவு கரம் நீட்டிய சீமான்

சாதிய பிரச்னைகள் குறித்து கோபி – சுதாகர் சரியாகத்தானே சொல்லியுள்ளனர் என சீமான் தெரிவித்துள்ளார். அவர்களை ஏன் எச்சரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், எச்சரிப்பதே ஒரு சாதிய ஆணவம் தானே என கேட்டுள்ளார். ‘Society Paavangal’ என்று கோபி – சுதாகர் யூடியூப்பில் பதிவேற்றம் செய்த வீடியோவை நீக்குவதோடு, சேனலையும் தடை செய்யகோரி புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 8, 2025
டிரம்ப்புக்கு ஷாக் கொடுத்த இந்தியா

அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலடியாக இந்தியாவும் ஆக்ஷனில் இறங்கியுள்ளது. போயிங் நிறுவனத்திடமிருந்து P-8I ஜெட் விமானங்கள் வாங்கும் $3.6 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஜெட் உற்பத்திக்கான மூலப் பொருள்கள் இந்தியாவிலிருந்து செல்லும் நிலையில், டிரம்ப்பின் 50% வரிவிதிப்பால், அவற்றின் விலையும் 50% உயர்ந்துள்ளது. இதனால் ஜெட் விலையும் உயர்வதால் ஆர்டரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
News August 8, 2025
மாநிலக் கல்விக் கொள்கை ஒரு நாடகம்: அண்ணாமலை

அரசு வெளியிட்டுள்ள மாநில கல்விக்கொள்கை என்பது CM ஸ்டாலினின் நாடகம் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், இந்தி உள்பட பல மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், ஆனால் அரசுப் பள்ளிகளில் 2 மொழிகள்தான் கற்றுக் கொடுப்போம் என CM சொல்வதாக சாடியுள்ளார். ஏழை மாணவர்கள் 2 மொழி தான் கற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை எனவும் குற்றம்சாட்டினார்.
News August 8, 2025
நீதிபதி அழைத்தும் வரமறுத்த ராமதாஸ்..!

அன்புமணி தரப்பில் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு தடைக் கோரி ராமதாஸ் தரப்பில் HC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணையின் போது <<17340719>>ராமதாஸ், அன்புமணியிடம்<<>> தனியாகப் பேச வேண்டியிருப்பதால் இருவரையும் நேரில் வருமாறு நீதிபதி அழைத்தார். இதற்கு அன்புமணி தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ராமதாஸால் வரமுடியாது என அவரது வழக்கறிஞர் தரப்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.