News February 16, 2025
அட்வான்ஸாக SK-க்கு வாழ்த்து சொன்ன சீமான்!

நாளை(பிப்.17) வரவுள்ள SK பிறந்தநாளுக்கு இன்றே வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சீமான். தனித்துவமிக்க நடிப்பு, நகைச்சுவை உடல்மொழி என அனைத்து மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவர் SK, தனது ஆருயிர் இளவல் அடுத்தடுத்து வெற்றி படைப்புகள் தர வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். SK மீது சீமானின் அதிரடி பாசத்துக்கு காரணம் எதுவும் இருக்கிறதோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Similar News
News December 3, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹240 குறைந்திருந்த நிலையில், இன்று(டிச.3) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹12,060-க்கும், சவரன் ₹96,480-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 20.79 டாலர்கள் குறைந்து 4,220 டாலர்களாக விற்பனையாகிறது. ஆனாலும், இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
9 மில்லியன் Followers-ஐ இழந்த ரொனால்டோ!

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ X தளத்தில் 9 மில்லியன் Followers-ஐ இழந்துள்ளார். நவம்பரில் 115 மில்லியன் Followers இருந்த நிலையில், அது 105 மில்லியனாக குறைந்துள்ளது. நவம்பரில் ரொனால்டோ – டிரம்ப் சந்திப்பை தொடர்ந்து, டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ளவர்கள், ரொனால்டோவை Unfollow செய்திருப்பார்கள் என கூறப்பட்டாலும், X தளத்தில் Fake ID-க்கள் நீக்கப்பட்டதே முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
News December 3, 2025
BREAKING: ‘ரோடு ஷோ’ முடிவை மாற்றினார் விஜய்

புதுச்சேரியில் வரும் 5-ம் தேதி ‘ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டிருந்த விஜய், தனது முடிவை மாற்றியுள்ளார். தொடர் மழை காரணமாக ‘ரோடு ஷோ’ திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி இல்லை எனவும், வேண்டுமானால் திடலில் பொதுக்கூட்டமாக நடத்திக் கொள்ளலாம் என <<18447638>>அம்மாநில காவல்துறை<<>> கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.


