News April 16, 2025
சீமான் வழக்கு – ‘வீடியோவை பார்த்த பின் உத்தரவு’

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட் சீமான் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரை 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
Similar News
News December 13, 2025
திமுகவே வாக்குத்திருட்டில் ஈடுபட்டு வருகிறது: அன்புமணி

<<18547716>>மகளிர் முன்னேற்றம்<<>> பற்றி CM ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், மதுக்கடைகளை திறந்து குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்துவிட்டு, மகளிர் முன்னேற்றம் எனக்கூறுவது வெட்கக்கேடு என அன்புமணி விமர்சித்துள்ளார். மகளிருக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டமே ஒரு வாக்குத்திருட்டு நடவடிக்கை தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அதிமுக, பாஜகவும் தேர்தலுக்காகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக கூறியிருந்தன.
News December 13, 2025
ரீ-ரிலீஸில் கில்லியை ஓரங்கட்டிய படையப்பா!

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள ‘படையப்பா’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முதல் நாளில் கிட்டத்தட்ட ₹4.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், ரீ-ரிலீஸில் முதல் நாளில் அதிகம் வசூல் படம் என்ற பெருமையையும் ‘படையப்பா’ பெற்றுள்ளது. முன்னதாக, விஜய்யின் ‘கில்லி’ ₹3.1 கோடி வரை வசூலித்திருந்ததே ரெக்கார்டாக இருந்தது.
News December 13, 2025
TN-ல் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா? R.S.பாரதி

அதிமுகவினர் திமுகவுக்கு போவார்களா, நடிகர் கட்சிக்கு போவார்களா என்ற குழப்பத்தில் EPS இருப்பதாக R.S.பாரதி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்காக 8 முறை PM மோடி, தமிழகம் வந்தும் எதுவும் எடுபடவில்லை; அதேபோல், அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும், எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என்று கூறிய அவர், SIR நடவடிக்கையால் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


