News April 1, 2024

டிடிவி தினகரனுக்கு சீமான் சரமாரி கேள்வி

image

உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? என டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தேனியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், டிடிவி தினகரன், சசிகலா பிரச்னையில் இருந்த போது தமிழகத்தில் இருந்து தான் மட்டுமே குரல் கொடுத்ததாக கூறினார். மேலும், சசிகலா பதவியேற்பதை தடுக்க 22 நாட்கள் தாமதப்படுத்தியது யார்? என்றும், சசிகலாவை நான்கு ஆண்டுகள் சிறையில் வைத்தது யார்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Similar News

News January 8, 2026

மார்னிங் செய்ய வேண்டிய இந்த ‘3’ சீக்ரெட்ஸ் தெரியுமா

image

✱எழுந்தவுடன் 1 லிட்டர் தண்ணீர் குடிப்பது, உடல் கழிவுகளை வெளியேற்ற உதவும் ✱காலை நேரத்தில் செய்யும் உடற்பயிற்சி, தியானம் அன்றைய தினம் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைக்க உதவும் ✱எந்த காரணத்தினாலும் காலை உணவைத் தவற விடக்கூடாது. ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து ஆயுளை அதிகரிக்கும். ட்ரை பண்ணுங்க. SHARE IT.

News January 8, 2026

ஜனநாயகன் ஒத்திவைப்பால் விஜய் அதிர்ச்சி!

image

‘ஜனநாயகன்’ ரிலீஸ் பிரச்னையால் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18793942>>இரவில் KVN நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால்<<>> விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே கரூர் விவகாரத்தில் வரும் 12-ம் தேதி நேரில் ஆஜராக CBI சம்மன் அனுப்பியுள்ளதால் அவர் அதிர்ச்சியில் உள்ள நிலையில், இது அடுத்த அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. விஜய், ரசிகர்களும் SM-ல் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

News January 8, 2026

ராமதாஸின் திட்டம் என்ன?

image

அதிமுக தலைமையிலான கூட்டணியில் நேற்று <<18785984>>அன்புமணி இணைந்துவிட்டார்<<>>. இதனால் அடுத்தகட்டமாக ராமதாஸ் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்புமணியை போல ராமதாஸை கூட்டணிக்கு இழுக்க அதிமுக முயன்றாலும், அவரது தரப்பில் இன்னும் பிடி கொடுக்கவில்லை. அதேபோல் ராமதாஸ் தரப்பில் உள்ளவர்களில் சிலர் திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!