News April 16, 2024
ஒரே கல்லில் திமுக, அதிமுக, பாஜகவை தாக்கிய சீமான்

நாட்டின் அனைத்து துன்பம், துயரங்களுக்கு காங்., பாஜக கட்சிகள்தான் காரணம் என சீமான் விமர்சித்துள்ளார். நாட்டின் முறையற்ற நிர்வாகம், ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு இக்கட்சிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடுவார்கள் என்று தமிழகத்தில் உள்ளவர்கள் (திமுக, அதிமுக) இதை தட்டிக்கேட்கவில்லை என விமர்சித்த அவர், கொசுவை ஒழிக்க முடியாத இவர்கள், எப்படி ஊழல், லஞ்சத்தை ஒழிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.
Similar News
News December 12, 2025
BREAKING: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

2021 தேர்தலில் விட்டதை பிடிக்க அதிமுகவும், 2026 தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க திமுகவும் புதிய வியூகங்களோடு தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக அமமுக மற்றும் OPS அணியில் உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பதற்கு அதிமுக நிர்வாகிகளுக்கு EPS அசைன்மென்ட் கொடுத்துள்ளார். அந்த வகையில், திருவாரூர் அமமுக முக்கிய நிர்வாகியான வலங்கைமான் ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
News December 12, 2025
துபேதான் CSK-வின் 6-வது பவுலர்: அஸ்வின்

இந்திய அணியில் 6-வது பவுலராக சிறப்பாக செயல்படும் ஷிவம் துபேவை, சென்னை அணி பேட்ஸ்மேனாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் தன்னால் 6-வது பவுலராக CSK-வுக்கு இருக்க முடியும் என்பதை, தனது பவுலிங் திறன் மூலம் துபே நிரூபித்துள்ளதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அவரை CSK சரியாக பயன்படுத்தவில்லை என கூறிய அஸ்வின், வரும் சீசனில் அது மாறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
நீதிபதியை பதவி விலக சொல்வது சரியல்ல: நயினார்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக செயல்படுவது நாட்டுக்கு நல்லதல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட MP-க்கள் கையெழுத்திட்டு லோக்சபா தலைவரிடம் நோட்டீஸ் வழங்கியது தவறான முன்னுதாரணம் என்றும் விமர்சித்துள்ளார். தனிப்பட்ட ஒரு கட்சியின் வாக்கு வங்கிக்காக இவ்வாறு செயல்படுவதாக அவர் சாடியுள்ளார்.


