News March 5, 2025
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்த சீமான்

2026 பேரவைத் தேர்தலுக்காகத் தென்காசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரை சீமான் அறிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் கெளஷிக் பாண்டியன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் களமிறங்குவார் என அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், முதல் கட்சியாக வேட்பாளரை அறிவித்து தமிழக அரசியல் களத்தை நாதக சூடுபிடிக்க வைத்துள்ளது.
Similar News
News March 6, 2025
என்னை மிரட்டி செய்ய வைத்தனர்: நடிகை ரன்யா ராவ்

தங்கக் கடத்தலில் ஈடுபட்டு கைதான நடிகை ரன்யா ராவிடம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தன்னை சிலர் மிரட்டி தங்கக் கடத்தலில் ஈடுபடச் செய்ததாக ரன்யா ராவ் கூறியுள்ளார். முன்னதாக, துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்தபோது பெங்களுரில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், நடப்பாண்டில் மட்டும் 10 முறை அவர் துபாய் சென்று வந்தது தெரியவந்துள்ளது.
News March 5, 2025
BREAKING: நியூசி., அபார வெற்றி

ICC Champions Trophy தொடரின் 2nd Semi-Finalலில் தெ.ஆப்., அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நியூசி., அணி முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த NZ 362 ரன்கள் எடுத்தது. இந்த கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய SA 50 ஓவரில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால், இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசி., அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறப்போவது யார்?
News March 5, 2025
உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திருச்சியை சேர்ந்த பிரபல கவிஞர் நந்தலாலா (70) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சியினர், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று கவிஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சிறந்த பேச்சாளரான நந்தலாலா, தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றப் பொதுக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து இருந்தார்.