News October 22, 2025
அடுத்த மாநாட்டை அறிவித்தார் சீமான்

திருச்சியில் வரும் 2026 பிப்ரவரி 7-ம் தேதி ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டை’ நடத்த போவதாக சீமான் அறிவித்துள்ளார். நம் இனத்தின் திருவிழா என்பதால், அனைவரும் கூடுவோம் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை ‘மரங்களின் மாநாடு’, ‘மலைகளின் மாநாடு’, ‘ஆடு மாடுகளின் மாநாடு’ ஆகியவற்றை நடத்தியுள்ள அவர், வரும் நவம்பர் 15-ம் தேதி ‘தண்ணீர் மாநாட்டையும்’ நடத்த உள்ளார்.
Similar News
News March 12, 2026
8 வருஷமா டார்ச்சர் பண்றாங்க.. ரஷ்மிகா வேதனை!

கடந்த 8 ஆண்டுகளாக வந்த வதந்திகளை கண்டுகொள்ளவில்லை என்றாலும், கடந்த 24 மணிநேரத்தில் அது மிகவும் அதிகரித்துள்ளதாக ரஷ்மிகா வேதனை தெரிவித்துள்ளார். இனிமேல் தாங்க முடியாது, அடுத்த 24 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய ஆடியோ நீக்கப்படாவிட்டால், வழக்கு தொடரப்போவதாக ரஷ்மிகா எச்சரித்துள்ளார். முன்னதாக, ரக்ஷித் ஷெட்டி குறித்து ரஷ்மிகாவின் தாயார் கடுமையாக விமர்சித்திருந்த ஆடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
News March 12, 2026
WFH.. லாக்டவுன் போல மாறும் சூழல்!

TN-ல் சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் HCL நிறுவனம், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற(WHF) வழங்கியுள்ளது. ஊழியர்களை அழைத்து வரும் Cab, பஸ்களில் எரிபொருள் நிரப்புவதில் நிலவும் சிக்கல், கம்பெனி கேன்டீன்களில் சமைக்க முடியாத நிலை ஆகியவற்றால் WFH முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கொரோனா ஊரடங்கு போன்ற சூழல் மீண்டும் வந்துவிட்டதாக பொதுமக்கள் எண்ணுகின்றனர்.
News March 12, 2026
IPL சீசன் Opener.. இந்த டீம் தான் டாப்பு!

IPL 2026 தொடரின் முதல் மேட்ச்சில் RCB, SRH அணிகள் மோதவுள்ளன. முந்தைய வருடம் சாம்பியன் பட்டம் வென்ற அணியே சீசன் முதல் மேட்ச்சில் விளையாடும். அப்படி அதிகமுறை சீசனின் முதல் மேட்ச்சில் விளையாடிய அணிகளின் லிஸ்ட்டை கொண்டுவந்துள்ளோம். எந்த அணி டாப்பில் இருக்கிறது என அறிய போட்டோவை இடது புறமாக Swipe பண்ணவும். PBKS ஒருமுறை விளையாடியதில்லை என்பது ப்ரீத்தி ஜிந்தா ரசிகர்களுக்கு சோகமான செய்தியே.


