News April 5, 2025
மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News January 20, 2026
ஜனவரி 20: வரலாற்றில் இன்று

*1841 – ஹாங்காங் தீவு பிரிட்டனால் கைப்பற்றப்பட்டது. *1859 – தமிழறிஞர், மொழி ஆய்வாளர் சவரிராயர் பிறந்த தினம். *1990 – அசர்பைஜான் விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் ராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. *1964 – இந்திய விமானப்படை MiG-21 போர் விமானத்தை அதிகாரப்பூர்வமாக சேவையில் இணைத்தது. *2009 – பராக் ஒபாமா, அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.
News January 20, 2026
நிதிஷ் தான் சரியான மாற்று வீரர்: இர்பான் பதான்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ODI-ல் நிதிஷ் குமார் ரெட்டி அரைசதம் அடித்து அசத்தினார். இதுகுறித்து பேசிய இர்பான் பதான், ஹர்திக் பாண்டியாவுக்கு நிதிஷ் சரியான மாற்று வீரர் என்று கூறினார். 135 கிமீ வேகத்தில் பந்து வீசவும், பெரிய ஷாட்களை அடிக்கவும் அவருக்கு திறன் உள்ளது. அவர் தொடர்ச்சியாக தோல்வியடைந்தாலும் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
News January 20, 2026
விமான கட்டணம் உயர்வு: நோட்டீஸ் அனுப்பிய SC

பண்டிகைக் காலங்களில் விமான நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தி பயணிகளைச் சுரண்டுவதாக SC கருத்து தெரிவித்துள்ளது. தனியார் விமான நிறுவனங்களின் கட்டண உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இந்த கட்டண உயர்வு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் DGCA-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


