News August 6, 2025

ரஷ்யாவில் பாதுகாப்பு ஆலோசகர்

image

கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்கா அச்சுறுத்தி வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா – ரஷ்யா இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் அவரது இந்த பயணம் அமைந்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், இந்த மாத இறுதியில் ரஷ்யா பயணம் மேற்கொள்ள உள்ளார். டிரம்பின் வரி மிரட்டல் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Similar News

News August 6, 2025

கூட்டணிக் கட்சிகள் குறித்து பேச திமுகவினருக்கு தடை

image

திமுக தலைமை அறிவுறுத்தலின்பேரில், மதுரை MP சு.வெங்கடேசன் & கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக பேச திமுகவினருக்கு தடைவிதித்து மதுரை மாவட்டச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அரசியல் லாப நோக்கத்திற்காக சமரசம் செய்யப்படுவதாக ஆளும் கட்சியினர் குறித்து சு.வெ அறிக்கை வெளியிட்டதற்கு எதிராக திமுக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

News August 6, 2025

இந்தியா மீதான வரி.. டிரம்ப்பை சாடிய முன்னாள் USA அதிகாரி

image

வரிவிதிப்பில் இறங்குகிறேன் என்ற பெயரில், நட்பு நாடான இந்தியாவின் உறவை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என டிரம்ப்பிற்கு, ஐநாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவிற்கு வரி விதிப்பில் இருந்து 90 நாள்கள் விலக்கு அளிக்கப்பட்டதையும் அவர் சாடியுள்ளார். மேலும், இது இந்தியாவை பகைமை அடையச் செய்யும் என்றும் எச்சரித்துள்ளார்.

News August 6, 2025

BREAKING: தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

image

தமிழக மீனவர்களை கைது செய்து மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்குவந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அனைவரையும் கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!