News April 21, 2024

பாஜகவில் ஐக்கியமாகும் மதசார்பற்ற ஜனதா தளம்?

image

அனைத்தும் சீராக செல்லும்பட்சத்தில், பாஜகவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இணையும் என்று அக்கட்சித் தலைவர் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். பாஜகவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைய இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியானபடி உள்ளது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள குமாரசுவாமி, பாஜக தங்களை நல்லவிதமாக நடத்தினால், அக்கட்சியுடன் தனது கட்சி இணையும், 2 தரப்பும் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.

Similar News

News January 31, 2026

BREAKING: ஆசிரியர்களுக்கு ஒரு மாத சம்பளம் கட்!

image

சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 36-வது நாளாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் தலையில் அரசு பேரிடியை இறக்கியுள்ளது. அவர்களுக்கு ‘No work No pay’ அடிப்படையில் ஜன. மாத சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, போராட்டத்தை கைவிடவில்லை எனில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசு கூறியிருந்தது. அதன்படி சம்பளம் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News January 31, 2026

ரயில்வேயில் 22,000 வேலைகள்.. இன்றே விண்ணப்பிக்கலாம்..

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 22,000 குரூப் – D பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி: 10TH, ஐடிஐ. வயதுவரம்பு: 01.01.2026 தேதியின்படி 18- 33 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.2.2026. விண்ணப்பக் கட்டணம்: பட்டியலினத்தவர்களுக்கு ₹250, மற்றவர்களுக்கு ₹500. <>www.rrbappyl.gov.in<<>> என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

News January 31, 2026

வெள்ளி நகைகள் விலை ₹55,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

<<19009659>>தங்கம் விலையை<<>> போன்று வெள்ளி விலையும் இன்று (ஜன.31) மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹55 குறைந்து ₹350 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி ₹55,000 குறைந்து ₹3.5 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் வெள்ளி நகைகள் வாங்க நினைத்தோர் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் ₹55,000 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!