News March 24, 2025
இபிஎஸ் எடுக்கும் ரகசிய சர்வே.. மூத்த தலைவர்கள் ஷாக்!

இபிஎஸ் எடுக்கும் ரகசிய சர்வே அதிமுகவில் பல மூத்தத் தலைவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. 234 தொகுதிகளிலும் ஓய்வு பெற்ற உளவுத்துறை ஐஜியான தனது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வைத்து இந்த பணிகளை இபிஎஸ் செய்து வருகிறாராம். இதில், சறுக்கும் தலைகளுக்கு 2026 தேர்தலில் நிச்சயம் சீட்டு இல்லை எனக் கறார் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதில், எடப்பாடியின் மகன் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 28, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை… கலெக்டர்கள் அறிவிப்பு

புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(நவ.28) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாளை சனிக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு வழக்கம்போல் விடுமுறை என்றும், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News November 28, 2025
30-ம் தேதிக்குள் இத பண்ணுங்க.. இல்லனா பென்ஷன் வராது!

மத்திய அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (NPS) ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு (UPS) மாற நவம்பர் 30-ம் தேதிக்குள் (நாளைமறுநாள்) விண்ணப்பிக்க வேண்டும். அதே போல, ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற, வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், இப்பதிவை அனைத்து நண்பர்களுக்கும் உடனே ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
இந்த 10 விஷயங்களை செய்யாதீங்க.. சட்டவிரோதம்

இந்தியாவில் சில செயல்கள் செய்வதற்கு உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவை, நாடு மற்றும் நாட்டு மக்களின் நலம், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தடை செய்யப்பட்டுள்ளன. மீறினால் அது சட்டவிரோதமானது, தண்டனைக்குரியது. சட்டவிரோதமான 10 செயல்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.


