News August 11, 2024
Hindenburg குற்றச்சாட்டுக்கு செபி தலைவர் மறுப்பு

Hindenburg குற்றச்சாட்டுக்கு செபி தலைவர் மதாபி புரி மறுத்துள்ளார். அவர் மீதும், கணவர் மீதும் Hindenburg குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு 2 பேரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் அறிக்கையில், அடிப்படை ஆதாரமற்ற அந்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், அதில் எந்த உண்மையும் இல்லை. தங்கள் வாழ்க்கையும், நிதி பரிவர்த்தனையும் திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Similar News
News September 17, 2025
அழகில் மயக்கும் அனீத் படா

‘சையாரா’ என்ற பாலிவுட் காதல் திரைப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. உணர்ச்சி மிக்க காதல் கதை கொண்ட ‘சையாரா’ கிளர்ச்சியூட்டும் இசையையும் கொண்டுள்ளது. இந்த படத்தின் மூலம் நடிகை அனீத் படாவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. அனீத் படாவின் அழகிய போட்டோஸ் மேலே இணைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க. உங்களுக்கு அனீத் படாவை ஏற்கெனவே தெரியுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 17, 2025
இன்றைய போர்களை கணிக்க முடியவில்லை: ராஜ்நாத் சிங்

கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாடு நடந்து வருகிறது. அதில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்தியல், உயிரியல், கண்ணுக்கு தெரியாத சவால்களை எதிர்கொள்ள நமது ஆயுத படைகள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், இன்றைய போர்கள் திடிரென ஏற்பட்டு, கணிக்க முடியாதவையாக மாறுவதாகவும், எனவே நமது எழுச்சித் திறன்கள் போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
News September 17, 2025
காலக்கெடு நிறைவு: இன்று முதல் ₹5,000 அபராதம்

ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இனி புதிதாக தாக்கல் செய்பவர்களை கால தாமதம் என்றே வருமான வரித்துறை எடுத்துக்கொள்ளும். இனி அபராதம் செலுத்தினால் மட்டுமே ITR தாக்கல் செய்ய முடியும். அதன்படி, ஆண்டு வருமானம் ₹5 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் ₹1,000, ₹5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ₹5,000 செலுத்தி, வரும் டிச.,31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.