News March 24, 2024
பாஜகவில் இணைந்தவுடன் தொகுதி ஒதுக்கீடு

111 பேர் அடங்கிய 5வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டாலுக்கு, அவர் எம்பியாக இருந்த குருஷேத்ரா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பல்பூர் – தர்மேந்திரா பிரதான், சுல்தான்பூர் – மேனகா காந்தி, தும்கா – சீதா சோரன், பெல்காம் – ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட பல தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News April 20, 2025
சன்டேவில் சங்கடம்: மீன்கள் விலை கிடுகிடு உயர்வு!

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் சந்தைகளில் மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால், மீன்களின் விலை வழக்கத்தை விட கிலோவுக்கு குறைந்தபட்சம் ₹100 வரை அதிகரித்துள்ளது. அதுவும் விடுமுறை நாளான இன்று மீன்கள் விலை உயர்ந்திருப்பது, அசைவ பிரியர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவோர் மட்டன், சிக்கனுக்கு மாறியுள்ளனர்.
News April 20, 2025
திமுக நிர்வாகி தங்கராசு மறைவு: CM ஸ்டாலின் இரங்கல்

திமுக மூத்த நிர்வாகியும், கடலூர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவருமான தங்கராசு காலமானார். தங்கராசுவை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கராசுவை கடந்த 1-ம் தேதி மினிஸ்டர் MRK பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்த்து சிகிச்சை குறித்து கேட்டறிந்த நிலையில், அவரும் தங்கராசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
News April 20, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. விண்ணப்பிப்பவர்கள் 24 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். மாதச் சம்பளம் ₹23,000 இருந்து வழங்கப்படும். <