News March 13, 2025
சீமானின் உதவியாளர், பாதுகாவலருக்கு ஜாமின்!

சீமானின் உதவியாளர் சுபாகர், பாதுகாவலர் அமல்ராஜூக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், இருவர் மீதும் இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மறு உத்தரவு வரும் வரை இருவரும் பூக்கடை காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2025
பராசக்தி படத்தில் பாசில் ஜோசஃப்?

சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பில், மலையாள நடிகர் பாசில் ஜோசஃப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொழும்புவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பிரபலங்கள் படத்தில் உள்ள நிலையில், பாசிலும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
News March 14, 2025
நாளை வங்கிக் கணக்கில் ₹1,000

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, TN அரசு மாதம் தலா ₹1,000 வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் இத்தொகை, நாளை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதனிடையே, இன்றைய தமிழக பட்ஜெட்டில் மகளிர் உதவித்தொகை திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்பட்டு, ₹1,000ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News March 14, 2025
மீண்டும் பாமகவுடன் நெருக்கம் காட்டும் பண்ருட்டி வேல்முருகன்

எலியும், பூனையுமாக இருந்த பாமக, தவாக மீண்டும் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளது. வேல்முருகனை சந்தித்த பாமக நிர்வாகிகள், அக்கட்சியின் நிழல் பட்ஜெட் நகலை வழங்கினர். இதனை X பக்கத்தில் பகிர்ந்துள்ள வேல்முருகன், ‘அய்யா, சின்னய்யாவுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார். பாமகவிலிருந்து விலகிய பிறகு ராமதாஸ், அன்புமணியை கடுமையாக விமர்சித்து வந்த வேல்முருகனின் இந்த திடீர் மனமாற்றம் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.