News October 7, 2025
கடல் உணவு பிரியர்களே.. இது உங்களுக்கு

இந்தியாவின் பல பகுதிகளில், ஜூன் முதல் செப்டம்பர் வரை மீன் சாப்பிட ஏற்ற காலம் கிடையாது. அப்போது. மீன் இனப்பெருக்க காலம் மற்றும் மழைக்காலங்களில் நீர் மாசுபடுவதால் மீன்கள் மூலம் தொற்றுநோய் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால், அக்டோபர் மாதம் மீன்கள் சாப்பிட சிறந்த மாதமாக கருதப்படுகிறது. அக்டோபரில் என்னென்ன மீன்கள் சாப்பிடலாம் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க.
Similar News
News October 7, 2025
நோயாளிகள் இனி ‘மருத்துவ பயனாளிகள்’

நோயாளிகள் இனி ‘மருத்துவ பயனாளிகள்’ என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஹாஸ்பிடலுக்கு சிகிச்சைக்கு வருபவர்களை இனி நோயாளிகள் என அழைக்கக்கூடாது. இதற்கு ஏற்றார்போல் மருந்துச் சீட்டுகளில் ‘நோயாளியின் பெயர்’ என்ற இடத்தில் மருத்துவ பயனாளிகள் என்று மாற்ற வேண்டும். அரசின் இந்த பெயர் மாற்றம் குறித்து உங்கள் கருத்து என்ன?
News October 7, 2025
குறையும் இல்லை, இனி ஓய்வும் இல்லை: ராமதாஸ்

உடல்நலக் குறைவால் கடந்த 3 நாள்களாக சென்னை அப்போலோவில் சிகிச்சையில் இருந்தார் ராமதாஸ். CM ஸ்டாலின், DCM உதயநிதி ஸ்டாலின், EPS, சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், இன்று மாலை அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தனக்கு குறையேதும் இல்லை என டாக்டர்கள் கூறியுள்ளதாகவும், இனி ஓய்வும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News October 7, 2025
கதை சொல்லும் ₹2 காயின்

நமது ₹2 நாணயங்களில் என்ன கதை இருக்கிறது தெரியுமா? முத்திரை, சின்னம் என ஒவ்வொரு வடிவமைப்பிலும் ஒரு கதை இருக்கு. மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும். இந்த கதையை, உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. இதுபோன்று, வேறு ஏதேனும் கதை வேண்டுமா? கமெண்ட்ல சொல்லுங்க.