News November 24, 2024

SDPI கட்சியின் மாநில தலைவராக மீண்டும் நெல்லை முபாரக் தேர்வு

image

SDPI கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழகத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியும் இன்று (நவ.24) நடைபெற்றது. தமிழக தலைவராக மேலப்பாளையத்தைச் சேர்ந்த நெல்லை முபாரக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News January 9, 2026

நெல்லை: கீழே விழுந்து பெயிண்டிங் தொழிலாளி பலி.!

image

ராமானுஜம்புதூரை சேர்ந்தவர் இளம்வழுதி (வயது 58). பெயிண்டிங் தொழிலாளியான இவர் நாவல் குளம் கிராமத்தில் ஒரு வீட்டில் பெயிண்டிங் தொழில் செய்து கொண்டிருந்தார். அப்போது ஏணியில் கால் தவறி கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுக்குறித்து மூலைகரைப்பட்டி போலீசார் விசாரணை.

News January 9, 2026

நெல்லை: தேர்வு இல்லை; ARMY ல் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலை..

image

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் 05.02.2026 க்குள் இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். முக்கியமாக இதற்கு தேர்வு கிடையாது. மதிப்பெண் மற்றும் நேர்காணல் மூலம் பணி வழங்கப்படும். SHARE IT..

News January 9, 2026

நெல்லை: ரூ.1.32 கோடி மோசடி; மேலாளர் மீது வழக்கு

image

தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்மேய்ப்பர் நகரில் உள்ள, வங்கிகளுக்கு பணம் நிரப்பும் நிறுவன அலுவலகத்தில் ரூபாய் 1,32,48,000 நம்பிக்கை மோசடி செய்து கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் செல்வகுமார் என்பவர் மீது புகார் எழுந்தது. மண்டல செயல்பாட்டு மேலாளர் ஹரிஹரன் கொடுத்த புகாரில் நேற்று, தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!