News January 2, 2025

தமிழகத்தில் பரவும் ‘Scrub Typhus’ நோய்

image

தமிழகத்தில் பரவும் ‘Scrub Typhus’ நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. Orientia tsutsugamushi என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் இந்த நோய், உடலின் பல்வேறு பகுதிகளில் கருப்பு நிறக் காயங்களை ஏற்படுத்தும். விவசாயிகள், புதர் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டோரை இந்த நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News December 6, 2025

முருகன் இப்போதுதான் தெரிகிறாரா? சீமான்

image

பல கோடி மக்கள் வாழ்வில் விளக்கின்றி இருளில் கிடக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற துடிக்கின்றனர் என சீமான் விமர்சித்துள்ளார். மலைகள் கல்குவாரிகளாக மாற்றப்பட்ட போது ஏன் அவர்கள் வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு இன்று தான் முருகன் கண்ணுக்கு தெரிகிறாரா என்றும் சீமான் கேட்டுள்ளார்.

News December 6, 2025

மதுரை புதிய மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர்

image

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கையின் பெயரை சூட்டுவதில் தனக்கு பெருமை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ₹150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், 950 மீ., நீளம் கொண்டது.

News December 6, 2025

அன்புமணி மீது ராமதாஸ் கிரிமினல் புகார்

image

பாமக உள்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் இன்னும் சற்றுநேரத்தில் சிபிஐயில் புகார் தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாமக பொதுக்குழு குறித்த போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிபிஐ இயக்குனரை நேரில் சந்தித்து ஜி.கே.மணி புகார் மனுவை கொடுக்கவிருக்கிறார்.

error: Content is protected !!