News April 15, 2024
ஷங்கர் மகள் திருமணத்தில் திரைப் பிரபலங்கள்

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரபலங்களுக்கு நேரில் சென்று ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார். இந்நிலையில், இன்று ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.
Similar News
News October 29, 2025
PM SHRI திட்டத்துக்கு ‘ரெட் சிக்னல்’ போட்ட கேரளா

கல்வி நிதிக்காக, NEP அடிப்படையிலான ‘PM SHRI’ திட்டத்தில் இணைய உள்ளதாக கேரளா அறிவித்தது. இது கேள்விகளை எழுப்பிய நிலையில், ஆளும் LDF-ல் உள்ள முக்கிய கட்சியான CPI-யே கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தையும், CPI-ஐ சேர்ந்த 4 அமைச்சர்கள் புறக்கணித்தனர். இந்நிலையில், ‘PM SHRI’-ஐ செயல்படுத்துவதற்கான வேலைகளை நிறுத்த சொல்லி CM பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
News October 29, 2025
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணா ஆஜர்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் படி நிபந்தனை ஜாமினில் வெளிவந்தனர். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக ED-யும் விசாரணையை தொடங்கியது. இதில், இருவரும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணா இன்று ஆஜரான நிலையில், அவரிடம் ED விசாரணை நடத்தி வருகிறது.
News October 29, 2025
₹29,000 சம்பளம், 600 பணியிடங்கள்: APPLY NOW!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் RITES நிறுவனத்தில் காலியாகவுள்ள 600 சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: பொறியியல் டிப்ளமோ. வயது உச்ச வரம்பு: 40. தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. சம்பளம்: ₹29,735. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.12. விண்ணப்பிக்க இங்கே <


