News March 28, 2025
10 இடங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் ஜாக்கிரதை!

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. அடுத்த 10 நாள்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று சென்னை உட்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பதிவானது. ஈரோடு, கரூர், சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. பகலில் தேவையின்றி வெளியே வரவேண்டாம் மக்களே..!
Similar News
News December 4, 2025
சற்றுமுன்: விடுமுறை இல்லை.. அறிவித்தார் கலெக்டர்

இரவில் இருந்து விட்டுவிட்டு மழைபெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதேநேரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
BREAKING: அதிகாலை பயங்கர நிலநடுக்கம்

வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.05 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆகவும், அதிகாலை 4.45 மணிக்கு வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4-ஆகவும் பதிவாகியுள்ளது. இதனால், ஏற்பட்ட உயிரிழப்பு, பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
News December 4, 2025
Business 360°: சேவைத்துறை வளர்ச்சி அதிகரிப்பு

*கடந்த நவம்பரில், நாட்டின் சேவைத்துறை 59.8 புள்ளிகளை பெற்று வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் *பூஷான் பவர்ஸ் நிறுவனத்தில் ஜப்பானின் ஜே.எப்.இ ஸ்டீல்ஸ் நிறுவனம் ₹15,750 கோடி முதலீடு *இந்தியாவில் 5 லட்சம் கார்களை விற்றுள்ளதாக ஸ்கோடா அறிவிப்பு *ரிலையன்ஸின் எண்ணெய் நிறுவனமான நயாரா, கடந்த நவம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரட்டிப்பாக்கியுள்ளது.


