News March 18, 2025
கொளுத்தும் வெயில்; சூடுபிடிக்கும் ஏசி விற்பனை…

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியிருப்பதால், பகல் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், வெப்பத்தை தணிப்பதற்கான வியாபாரமும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. குளிர்பானங்கள் முதல் ஏ.சி, ஏர்கூலர், டியோடரன்டுகள் வரை விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் வியாபாரிகள் முகத்தில் தென்றல் வீசத் தொடங்கியுள்ளது.
Similar News
News March 19, 2025
போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை

ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையைச் சேர்ந்தவர் அருள்நேசன் (29). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News March 19, 2025
கோலி அதிருப்தி எதிரொலி: விதியை மாற்றும் பிசிசிஐ?

வெளிநாட்டு பயணங்களில் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கலாம் என்ற விதியை BCCI மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நடைமுறை வீரர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும், குடும்பத்தின் ஆதரவு எப்போதும் முக்கியம் என்றும் கோலி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், விதியில் மாற்றம் கொண்டு வர BCCI முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
News March 19, 2025
2 குழந்தைகள் பெற்றால் வரி இல்லை… எங்கு தெரியுமா?

குழந்தை பெற்ற தாய்மார்கள் வரி கட்ட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவில் அல்ல, ஹங்கேரியில். மக்கள் தொகை குறைந்து வருவதால் அந்நாட்டு PM விக்டர் ஆர்பன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘1 குழந்தை பெற்ற பெண்கள் 30 வயது வரையும், 2 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி கட்ட வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த நிலை வருமா?