News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News March 14, 2026
குற்றச் சமூகமாக மாறிவிட்டோம்: சீமான்

TN-ல் 6 வயது சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், குற்றச் சமூகமாக மாறிவிட்டோம் எனவும், போதை தலைவிரித்தாடுவதே குற்றச் சம்பவங்களுக்கு காரணம் என்றும் கூறினார். குற்றச் சம்பவங்களில் ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமல்ல, அதைத் தேர்வு செய்த மக்களுக்கும் பங்கு உள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News March 14, 2026
OPS அணியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவி!

OPS அணியிலிருந்து மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியவர்களுக்கு, EPS முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார். அந்த வகையில், ராஜ்யசபா MP தர்மர் மற்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், நேற்று அதிமுகவில் இணைந்த காளியம்மாளுக்கு மகளிர் அணியில் மாநில பொறுப்பு மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News March 14, 2026
TN அரசின் ₹20,000 மானியம்.. அப்ளை செய்வது எப்படி?

ஆன்லைன் டெலிவரி தொழிலாளர்கள் புதிதாக இ-ஸ்கூட்டர் வாங்க TN அரசு 20,000 வரை மானியம் வழங்குகிறது. இதனை பெற விரும்புவோர், அரசின் <


