News September 8, 2025

SCIENCE: உங்கள் மூளைக்கு வலி தெரியாது. ஏன் தெரியுமா?

image

உடலில் எங்கு வலித்தாலும், அதை மூளையால் உணரமுடிகிறது. ஆனால், மூளையில் ஏற்படும் வலி நமக்கு தெரிவதே இல்லை. ஏனென்றால், மூளையில் வலியை உணரும் ‘நோசிசெப்டர்’ நரம்புகள் இல்லை. இதனால்தான் ஒருவர் விழித்திருக்கும்போதே மூளை சர்ஜரிகளை செய்யமுடிகிறது. இது உண்மையென்றால் தலைவலி எப்படி ஏற்படுகிறது என நீங்கள் கேட்கலாம். தலை & கழுத்திலுள்ள நரம்புகள் அழுத்தத்திற்கு உள்ளாவதால்தான் தலைவலி ஏற்படுகிறது. SHARE.

Similar News

News September 8, 2025

50% தள்ளுபடி.. வாகன ஓட்டிகளுக்கு Happy News

image

செப்.13-ம் தேதியன்று நடைபெறவுள்ள தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள Traffic Fine-களை 50% வரை தள்ளுபடி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாதது, சிக்னலில் நிற்காமல் சென்றது உள்ளிட்ட 13 வகையான விதிமீறல்கள் இதில் அடங்கும். அதற்கு National Legal Services Authority-யின் ( NALSA) இணையதளத்தில் பதிவு செய்து, டோக்கன்களை பெற வேண்டும். SHARE IT

News September 8, 2025

நட்சத்திரம் மின்னக் காரணம் என்ன?

image

கண் சிமிட்டுவது போல நட்சத்திரங்கள் மின்ன என்ன காரணம் தெரியுமா? நம் பூமியின் வளி(காற்று) மண்டலம் தானாம். நீண்ட தொலைவுகளில் உள்ள நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி, காற்று மண்டலத்தின் பல அடுக்குகள் வழியே ஊடுருவி வரும்போது, தூசிகளால் அந்த ஒளி வளைந்தும், சிதறவும் செய்கிறது. இதனால், அந்த ஒளி விட்டு விட்டுத் தெரிவதால், மின்னுவது போல் தோன்றுகிறது. ஆனால், கிரகங்கள் மின்னுவதில்லையே. ஏன் தெரியுமா?

News September 8, 2025

துணை ஜனாதிபதி தேர்தல்: யாருக்கு எவ்வளவு பலம்

image

கூட்டணி அடிப்படையில் பார்த்தால் NDA-க்கு 436 MPகள், INDIA கூட்டணிக்கு 324 MPகள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. மெஜாரிட்டிக்கு தேவையான 391 MPகள் ஆதரவை NDA எளிதாக பெற்றுவிடும் என்றாலும், கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் இம்முறை போட்டி அதிகம் தான். கடந்த தேர்தலில் 346 வாக்குகள் வித்தியாசத்தில் NDA வேட்பாளர் வென்றார். ஆனால், இந்த முறை வித்தியாசம் 100-125 வாக்குகள் தான் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

error: Content is protected !!