News October 28, 2025
ராணிப்பேட்டையில் பள்ளிகள் இயங்கும்.. புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டையில் இன்று(அக்.28) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘மொன்தா’ புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அந்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டு WAY2NEWS பேசியது. அப்போது, சில ஊடகங்களில் தவறான தகவல் பரவுவதாகவும், இன்று பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News October 28, 2025
இந்தியாவின் டாப் 5 பணக்கார கோயில்கள்!

இந்தியாவில் துட்டு கொட்டோ கொட்டு’னு கொட்டும் கோயில் திருப்பதி என அனைவரும் அறிவோம். ஆனால், திருப்பதியை போலவே நாட்டின் பணக்கார கோயில்கள் லிஸ்ட் உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அந்த லிஸ்ட்டை பார்க்கவும். இவற்றில் எந்தெந்த கோயில்களில் நீங்க தரிசனம் செஞ்சிருக்கீங்க?
News October 28, 2025
வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த USA

அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கிரீன் கார்டு வைத்திருக்கும் வெளிநாட்டினர் உள்பட அனைவரும் நாட்டிற்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் facial recognition மற்றும் பயோமெட்ரிக் சோதனைக்கு உட்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் வைத்திருப்பவர்களை கண்டறிய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
FLASH: தொடர் ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தைகள்!

நேற்று போல் இன்றும் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. அதன்படி சென்செக்ஸ் 108 புள்ளிகள் உயர்ந்து 84,887 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 26,000 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. HDFC, BHARATHI AIRTEL, SBI உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேநேரம், ICICI, BAJAJ FINANCE, AXIS BANK உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளன.


